2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

டுவிட்டரின் மெதுவான வருமான வளர்ச்சி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 28 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வளர்ந்து வரும் சமூக ஊடகத் தளங்களிலிருந்து போட்டியை எதிர்நோக்கியுள்ள டுவிட்டர், கடந்த மூன்றாண்டுகளில், தனது மெதுவான காலாண்டு விற்பனையை பதிவு செய்துள்ளதாக டுவிட்டர் கூறியுள்ளது.

டுவிட்டரின் இரண்டாவது காலாண்டுக்கான வருமானமானது, 20 சதவீதத்தால் உயர்ந்து, 602 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகியுள்ளபோதும், கடந்த ஆண்டை விட, இது மிக மெதுவான வளர்ச்சியே ஆகும். கடந்தாண்டில், குறித்த பகுதியில், 61 சதவீதம் வளர்ச்சி பெறப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், கடந்த வருடம், குறித்த காலாண்டில், 136 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, இழப்பாக பதிவு செய்திருந்த டுவிட்டர், இம்முறை, குறித்த எண்ணிக்கையை, 107 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக குறைத்துள்ளது.

இது தவிர, விளம்பரதாரர்களுக்கு முக்கியமான காரணியான, மாதாந்த இயங்குநிலை பயனர்களின் எண்ணிக்கையை மூன்று சதவீதமாக டுவிட்டர் அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டிலிருந்த 310 மில்லியன் மாதாந்த இயங்குநிலைப் பயனர்கள் எண்ணிக்கையிலிருந்து, தற்போது, 313 மில்லியன் மாதாந்த இயங்குநிலைப் பயனர்களாக, குறித்த எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.

டுவிட்டரின் இணை நிறுவுநர்களில் ஒருவரான ஜக் டோர்ஸி, பிரதம நிறைவேற்றதிகாரியாக, டுவிட்டருக்கு கடந்த வருடம் திரும்பியிருந்த நிலையில், ஒன்பது மில்லியன் மாதாந்த இயங்குநிலைப் பயனர்களை மேலதிகமாக இணைத்திருந்தார். தவிர, 140 எழுத்துகள் எல்லையை தளர்த்தியிருந்ததுடன், பிரபலமான டுவீட்கள், முன்னால் காண்பிக்கப்பட்டதற்கு பதிலாக, டூவீட்கள் பதியப்பட்ட வரிசையிலேயே காண்பிக்கப்படுவது போல் அமைத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .