2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

திண்டாடிவரும் பேஸ்புக்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகெங்கிலும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.

இவ்வலைத்தளமானது கடந்த இரண்டு வருடங்களாக பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் ஆட்டம் கண்டு வருகின்றது.

அத்துடன் போலியான தகவல்கள் பரிமாறப்படுவதை தடுக்கவும் முடியாமல் திண்டாடி வருகின்றது.

இந்நிலையில் எதிர்காலத்தில் இவ்விரு விடயங்கள் தொடர்பாகவும் முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவுநரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

எனவே தனிநபர் தகவல்களை பாதுகாப்பது தொடர்பில் பேஸ்புக் நிறுவுனர் வழங்கிய உத்தரவாதத்தால் பயநர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

எனினும் இதன் சாத்தியத்தன்மை தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X