2024 மே 18, சனிக்கிழமை

நிலவின் துருவப்பகுதிகளில் தண்ணீர்!

Editorial   / 2024 மே 02 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவின் துருவப் பகுதிகளில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

நிலவின் துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த ஆண்டு சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதில் விக்ரம் லாண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது அகமதாபாத்தை மையமாக கொண்டு செயற்படும் இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, சந்திராயன் திட்டத்தின் தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஒஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்தது.

அதில் நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீற்றர் ஆழத்தில் பனிக் கட்டிகளாக உறைந்து இருப்பதையும் உறுதி செய்துள்ளது.

இவ்வாறு நிலவில் தண்ணீர் இருப்பது 380 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிலவில் பூமியைப் போல் எரிமலை வெடிப்புகள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளையும் உறுதி செய்திருப்பதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திரயான் 4 திட்டத்தில் சந்திரனின் துருவப் பகுதியில் தரைப்பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .