Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் செயலி (App) என்ற பெருமையை, பேஸ்புக்கிடமிருந்து டிக் டாக் தட்டிப்பறித்துள்ளது.
இதுவரை காலமும் அதிக டவுன்லோட் செய்யப்படும் மொபைல் செயலி என்ற பெருமை, 2004ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பேஸ்புக்கிடமே இருந்து வந்தது.
இந்நிலையில், Nikkei Asia நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் அதிக டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் செயலிகளில் பேஸ்புக்கை பின்னுக்குத் தள்ளி, சீனாவின் டிக் டாக் செயலி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சீனாவின் ByteDance நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் டிக் டாக், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில், பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டிருந்த நிலையிலும் தற்போது அதிக டவுன்லோட்கள் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2019ஆம் ஆண்டு வெளியான அதிக டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் டிக் டாக், உலகளாவிய ரீதியில் நான்காம் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago