Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 27 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயனர்களிலும் விளம்பரத்திலும் பலவீனமான வளர்ச்சி காரணமாக டுவிட்டர் தள்ளாடுகின்ற நிலையில், டுவிட்டரின் அண்மைய வருமான முடிவுகள், எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே வந்திருந்தநிலையில் முதலீட்டாளர்களை மேற்படி முடிவுகள் ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருந்தது.
இந்நிலையிலேயே, மேற்படி முடிவுகள் வெளியான பின்னர், டுவிட்டரின் பங்குகள், 13.6 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருந்தன.
இந்த முதலாவது காலாண்டுப் பகுதியில் டுவிட்டர், 310 மில்லியன் மாதாந்த பயனர்களைக் கொண்டுள்ளதுடன், 594.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை ஆய்வாளர்களினால் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகும்.
அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர், அவர்களிடமிருந்து வருமானம் ஈடுவதற்கு அண்மைய வருடங்களில் தடுமாறி வருகிறது.
தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலாண்டில், 590 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்கும் 610 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்குமிடையேயான வருமானத்தைப் பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையானது முதலீட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே உள்ளது.
தனது மந்தமான பயனர் அதிகரிப்பை அதிகரிக்கும் பொருட்டு, டுவிட்டர் ஆனது அண்மைய மாதங்களில் புதிய பயனர் இடைமுகத்தையும் நேரடிக் காணொளி வசதியையும் அண்மைய மாதங்களில் வழங்கியிருந்தது. எனினும் பேஸ்புக்கும் இதே நேரடிக் காணொளி சேவையை பின்னர் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய காலாண்டில் பயனர்களை டுவிட்டர் இழந்திருந்த நிலையில், இந்த காலாண்டில் சில பயனர்களை டுவிட்டர் பெற்றுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலதிகமாக ஐந்து மில்லியன் பயனர்களை டுவிட்டர் இம்முறை பெற்றுள்ள நிலையில் இது போதுமானதாக இல்லை.
இதன் காரணமாக, முதலீட்டாளர்களும், விளம்பரதாரர்களும் தங்களுக்கு அதிக நன்மையை வழங்கக்கூடிய ஏனைய சமூகவலைத் தளங்களான ஸ்நப்சட், பேஸ்புக் போன்றவற்றையே நாடுகின்றனர்.
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago