Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 11 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோனி நிறுவனம் முற்றிலும் புதிய பிளே ஸ்டேஷன் 5 சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1 டி.பி. வரை பில்ட்-இன் ஸ்டோரேஜ் மற்றும் கழற்றக்கூடிய டிஸ்க் டிரைவ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சாதனம் பி.எஸ். 5 ஸ்லிம் என்று அழைக்கப்படுகிறது
இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ்.5 கன்சோலை விட மெல்லியதாக இருக்கிறது. கேமர்களின் மாறி வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய பிளே ஸ்டேஷன் 5 பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய பி.எஸ். 5 ஸ்லிம் அதன் முந்தைய மாடலை விட 30 சதவீதம் சிறியதாகவும், 24 சதவீதம் வரை எடை குறைவாகவும் இருக்கிறது. டிஸ்க் டிரைவை பொருத்துவதற்கு சோனி நிறுவனம் இதன் பக்கவாட்டில் இடம் கொடுத்துள்ளது. இதனை விரும்பாதவர்கள், அதனை கழற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனை கழற்றினால், சைடு பேனலை பொருத்திக் கொள்ள வேண்டும்.
பி.எஸ். 5 டிஜிட்டல் எடிஷன் வாங்குவோர், எதிர்காலத்தில் புளூ-ரே டிஸ்க் டிரைவை மட்டும் தனியாக வாங்கிக் கொள்ள முடியும். புதிய மாடலின் ஒவ்வொரு பக்கத்திலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
55 minute ago
1 hours ago