2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு வசதிகள்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 09 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் பக்கங்களை நிர்வகிப்பவர்கள், வேலை வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உருவாக்கவும், பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறவும் கூடிய வசதியைச் சோதிப்பதாக, கடந்த திங்கட்கிழமை (07), பேஸ்புக் தெரிவித்துள்ளது. குறித்த நகர்வானது, வியாபாரங்களுக்கு ஆட்களைச் சேர்க்கும் லிங்டினுக்கு அழுத்தத்தை வழங்குவதாய் உள்ளது.

பேஸ்புக்கில் காணப்படும் சிறு வியாபாரங்கள் பலவற்றில் பெரும்பாலனவை, தம்மிடையே உள்ள வேலை வாய்ப்புகளை தமது பக்கத்தில் ஈடுகின்ற நடத்தையின் அடிப்படையில், பேஸ்புக் பக்கங்களை நிர்வகிப்பவர்கள், வேலை வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உருவாக்கவும், பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் சோதனையை நடாத்துவதாக, பேஸ்புக்கின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வியாபாரத்துக்கான சமூகவலைத்தளமாக பெரும்பாலும் அறியப்படும் லிங்டின், தொடர்பில் இருப்பதற்காக வேலை தேடுபவர்களிடமிருந்தும் வேலை வழங்குபவர்களிடமிருந்து அறவிடப்படும் மாதாந்தக் கட்டணத்தினாலேயே, லிங்டினின் பெரும்பாலான வருமானம் பெறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கின் வேலைவாய்ப்பு வசதி மூலமாக, நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களில் அதிக நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும், ஏனைய வேலை பெறுநர்களுக்கு முன்னால், வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு, பேஸ்புக் கட்டணத்தை அறவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .