2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

மின்னஞ்சல்களை இரகசியமாக கண்காணித்த யாகூ

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்ட குறிப்பிட்ட தகவல்களுக்காக, தனது பயனர்களின் உள்வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையும் தேடுவதற்கான மென்பொருள் அமைப்பினை, யாகூ இரகசியமாக கடந்த வருடம் உருவாக்கியதாக, இத்துறை சார்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் இரகசியமான தேவைக்கு யாகூ உடன் பணிந்து, தேசிய பாதுகாப்பு முகவரகம் அல்லது எஃப்.பி.ஐ-இன் வேண்டுகோளில், மில்லியன் கணக்கான, யாகூ மின்னஞ்சல் கணக்குள் ஸ்கான் செய்யப்பட்டதாக, யாகூவின் முன்னாள் பணியாளர்கள் மூவரும் இவ்விடயங்களுடன் பரிச்சயமான நான்காமவரும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க இணைய நிறுவனமொன்று, கிடைக்கப் பெறுகின்ற அனைத்து தகவல்களையும் தேடும், புலனாய்வு முகவரகமொன்றின் வேண்டுகோளை ஏற்றமை, இதுவே முதற்தடவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், என்ன தகவலை, புலனாய்வு அதிகாரிகள் தேடினர் என்பது தெளிவில்லாமல் உள்ளது. குறிப்பிட்ட சில சொற்களையே, யாகூவைத் தேடுமாறு கோரியுள்ளனர். அதாவது, மின்னஞ்சலிலுள்ள அல்லது இணக்கப்படும் கோப்புக்களில் இருக்கும் குறித்த சொற் தொடர்களே தேடப்பட்டுள்ளன.

யாகூவின் முன்னாள் பணியாளர்கள் இருவரின் கருத்துப்படி, மேற்குறித்த கட்டளையை ஏற்கும், யாகூவின் பிரதம நிறைவேற்றதிகாரி மரிஸா மேயரின் முடிவானது, சில சிரேஷ்ட நிறைவேற்றதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்ததாகவும், கடந்தாண்டு ஜூன் மாதத்தில், பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டாமோஸ் விலகியதாகவும் தெரிவித்துள்ளனர். அவர், இப்போது, பேஸ்புக் நிறுவனத்தின் உயர் பாதுகாப்பு பணியில் உள்ளார்.

இந்நிலையில், இவ்வாறான மின்னஞ்சல் தேடுதல்களை, தாம் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய அமெரிக்காவின் பாரிய மின்னஞ்சல் சேவை வழங்குநர்களான அல்பபெட்டின் கூகுள் நிறுவனமும் மைக்ரோசொப்ட் நிறுவனமும் தெரிவித்துள்ளன. ‌


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .