Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார்.
கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிபீடியா உலகின் தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது. விக்கிமீடியா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் விக்கிபீடியாவை நிர்வகித்து வருகிறது. இந்த தளம் சுமார் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை வழங்கி வருகிறது. சுமார் 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற புதிய தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை (05) வெளியிட்ட பதிவில், “அடுத்த 2 வாரங்களில் குரோக்பீடியா தொடங்கப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.
தொழிலதிபர் எலான் மஸ்க் சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எக்ஸ் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் தொடங்கப்பட்டது. எக்ஸ் ஏஐ சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் குரோக் என்ற அரட்டை தளம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக எக்ஸ் ஏஐ சார்பில் தற்போது குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியம் தொடங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக குரோக்பீடியாவில் ஆங்கில மொழியில் 68 லட்சம் கட்டுரைகள் இடம்பெற உள்ளன. அதோடு மொழி அகராதி, புத்தகம், செய்திகள், பொது அறிவு, சுற்றுலா தலங்கள் குறித்த சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் மூத்த அதிகாரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘விக்கிபீடியா தளத்தில் பல்வேறு பொய்கள் பரவி கிடக்கின்றன. உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன.
சில தீய சக்திகள் விக்கிபீடியா மூலமாக தவறான தகவல்களை அளித்து வருகின்றன. இதற்கு விக்கிபீடியா நிர்வாகமும் உறுதுணையாக இருந்து வருகிறது. புதிதாக அறிமுகமாகும் குரோக்பீடியா, பொதுமக்களுக்கு உண்மையான தகவல்களை மட்டுமே வழங்கும்’’ என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .