Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 21 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுவீட் ஒன்றின் 140 characters எல்லையை டுவிட்டர் உறுதியாகப் பேணுகின்றபோதும், டுவீட்களில் காணப்படும் பல்வேறு இணைப்புகளை, டுவீட் ஒன்றுக்கானா 140 characters எல்லையில் டுவிட்டர் கணக்கிடப்போவதில்லை.
கடந்த வார தமிழ்மிரர் தொழில்நுட்ப பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது போன்று, விரிவாக்கப்பட்ட டுவீட்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதாக கடந்த திங்கட்கிழமை (19) டுவிட்டர் தெரிவித்திருந்தது.
GIFகள், காணொளிகள், கருத்துக்கணிப்புகள் போன்ற இணைப்புகள் இனிமேல், 140 characters எல்லைக்குள் கணக்கிடப்படப்போவதில்லை. இது தவிர, மேற்கோள் இடப்படும் டுவீட்களும் 140 characters எல்லைக்குள் வராது என்றபோதும், டுவீட்களில் உள்ளடக்கப்படும் இணையச் சுட்டிகள், வழமை போன்று 140 characters எல்லைக்குள்ளேயே வருகின்றன.
இதேவேளை, பதிலளிக்கும் பயனர்பெயர்களை 140 characters எல்லைக்குள் தவிர்க்கின்ற புதிய பதிலளிப்புகளையும் டுவிட்டர் சோதிக்கின்றது. ஒரே நேரத்தில் பலருக்கு பதிலளிக்கும்போது, அவர்களின் அனைவரினதும் பயனர்கள் பெயரை 140 characters எல்லைக்குள் தவிர்ப்பதாக டுவிட்டர் பகிர்ந்த GIF ஒன்று வெளிப்படுத்துகின்றது.
விரிவாக்கப்பட்ட டுவீட்களை, ஒரு வருடத்துக்கு மேலாக மேம்படுத்திய டுவிட்டரிடமிருந்து மேற்கூறப்பட்ட மாற்றங்கள் வரவேற்கத்தக்கதாகவே உள்ளன. 10,000 வரையான charactersஐ டுவீட் ஒன்று உள்ளடக்குவதாகவே டுவீட்களை டுவிட்டர் வடிமைத்திருந்தபோதும், குறிப்பிட்ட இற்றைப்படுத்தல்களுக்கானா இடம் என்ற டுவிட்டரின் அடையாளத்தை இழக்கச் செய்துவிடும் என்ற அச்சம் காரணமாக, அந்த வடிவமைப்பை டுவிட்டர் கைவிட்டிருந்தது.
5 minute ago
21 minute ago
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
47 minute ago
51 minute ago