Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெட்டா நிறுவனம் சமீபத்தில் புதிய ஏ.ஐ. அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் வாட்ஸ்அப் செயலிக்கான ஏ.ஐ. ஸ்டிக்கர்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதற்கான அம்சம் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்பட்டு வந்து நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த வலைத்தள பதிவில், ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் சாட் அனுபவத்தை மேம்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. Llama 2 மற்றும் Emu போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு மெட்டா நிறுவனத்தின் ஏ.ஐ. டூல் எழுத்துக்களை அதிக தரமுள்ள ஸ்டிக்கர்களாக உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் ஆங்கில மொழியில் மட்டும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. ஸ்டிக்கர்களை உருவாக்க ஆங்கில மொழியில் வாக்கியங்களை வழங்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த புதிய அம்சம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரி உள்ளிட்டவைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப்-இல் ஏ.ஐ. ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?
வாட்ஸ்அப் சாட் செயலியில் உள்ள "More" ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
பின் "Create" மற்றும் "Continue" ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் உருவாக்க நினைக்கும் ஸ்டிக்கருக்கான விவரங்களை குறிப்பிட வேண்டும்.
இனி நான்கு ஸ்டிக்கர்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
உங்களுக்கு தேவையெனில், அதில் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
ஸ்டிக்கரில் க்ளிக் செய்து அதனை மற்றவர்களுக்கு அனுப்ப துவங்கலாம்.
தேவையற்ற ஸ்டிக்கர்கள் குறித்து புகார் அளிக்கும் வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது. இதற்கு குறிப்பிட்ட ஸ்டிக்கரை அழுத்தி பிடித்து ">" ஐகானை க்ளிக் செய்து "Report," பிறகு மீண்டும் "Report" ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago