Mithuna / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாட்ஸ்அப் செயலியில் உள்ள லாக்டு சாட் (Locked Chat) அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் (Secret Code) எனும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக அறிவிக்கப்பட்ட சாட் லாக் அம்சம் தற்போது நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும் போது, நீங்கள் உங்களது போனினை மற்றவர்களிடம் கொடுக்கும் போது, அவர்கள் உங்களது மிகமுக்கிய உரையாடல்களை பார்த்து விடுவார்களா என்ன அஞ்சி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நீங்கள் உங்களது சாட்களுக்கென தனி பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். பாஸ்வேர்டுக்கு மாற்றாக கைரேகை அல்லது ஃபேஸ் ஐடி உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தலாம்.
அந்த வரிசையில், மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் புதிய சாட் லாக் அம்சத்தில் சீக்ரெட் கோட் வசதி வழங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறார். இதை கொண்டு சாட்களை பிரத்யேக பாஸ்வேர்டு மூலம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைக்கப்படும் சாட்கள் அனைத்தும் மெயின் சாட் லிஸ்ட்-இல் காண்பிக்கப்படாது.
மேலும் செயலியில் பயனர் செட் செய்த சீக்ரெட் கோட்-ஐ பதிவிட்டால் மட்டுமே இயக்க முடியும். இந்த அம்சத்தினை இயக்க செயலியின் சாட் -- லாக் செட்டிங்ஸ் -- ஹைடு லாக்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி சீக்ரெட் கோட்-ஐ செட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, நீங்கள் தேர்வு செய்த சாட் மெயின் சாட் லிஸ்ட்-இல் இடம்பெறாது.

தற்போது லாக்டு சாட் அம்சத்தை இயக்குவதற்கான ஷாட்கட்- சாட் ஸ்கிரீனில் இருந்து கீழ்புறம் நோக்கி ஸ்வைப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, கைரேகை சென்சார் அல்லது ஃபேஸ் ஐடி மூலம் சாட்களை இயக்கலாம். சாட்களில் சீக்ரெட் கோட் செட் செய்த பிறகு, செயலியில் உள்ள லாக்டு சாட்ஸ்-ஐ இயக்க வாட்ஸ்அப் சர்ச் பாரில் சீக்ரெட் கோட்-ஐ பதிவிட வேண்டியது அவசியம் ஆகும்.
1 hours ago
8 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
07 Dec 2025
07 Dec 2025