Ilango Bharathy / 2021 ஜூன் 07 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றுக்கு மத்தியில் முகக்கவசங்கள் நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டன.
இந்நிலையில் நேற்றைய தினம் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘தடுப்பூசி போட்டாச்சு... நீங்க..?’ என்ற ஒரு பதிவுடன் தனது மகனுடன் எடுத்தக்கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில் அவர் அணிந்திருந்த முகக்கவசமானது ஹை-டெக் தொழில்நுட்பம் கொண்டதாக இருந்ததால் மக்கள் மத்தியில் பேசுபொருளானது.

இந்நிலையில் அவர் அணிந்திருந்த முகக்கவசத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.கடந்த ஆண்டு எல்ஜி நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்முகக் கவசமானது காற்றை சுத்திகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது இவ் முகக்கவசத்தின் இரு புறங்களிலும் காற்று சுத்திகரிப்பான்கள் இருக்கும். அவை காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் இடையூரின்றி பல மணி நேரம் அணிந்துகொள்ள முடியும். அத்துடன் இதில் பொருந்தப்பட்டிருக்கும் சென்சார், அணிந்திருப்போரின் சுவாச சுழற்சிக்கு ஏற்ப அளவைமாற்றி கொள்ளும்.
மேலும் முகக்கசம் அணிந்திருக்கும் போது கிருமிகள் நம்மை நெருங்காத வண்ணம் காத்துக்கொள்ள UV-LED ஒளி பொருத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக இம்முகக்கவசத்தில் ஒவ்வொரு கூறுகளும் மாற்றத்தக்கவை என்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை என்றும் சொல்லப்படுகிறது.
820 mAh பட்டரி திறனுடைய இம்முகக்கவசத்தை 2 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்த-சக்தி பயன்பாட்டில் (Low-power mode) 8 மணிநேர நீடிக்கும் எனவும், அதிக-சக்தி பயன்பாட்டில் (High-power mode) 4 மணி நேரம் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் 30 நாட்கள் பயன்பாட்டிற்கு பிறகு முகக்கவசத்தில் உள்ள ஃபில்டர்களை மட்டும் மாற்ற வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட ஹை-டெக் தொழில்நுட்பங்களை கொண்ட இந்த முகக்கவசத்தின் விலை சுமார் 249 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
41 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
52 minute ago
1 hours ago