Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தரையில் இருந்து செங்குத்தாக உயர்ந்து அதே போல தரையிறங்க கூடிய எலெக்ட்ரிக்கல் எயார் டாக்சியை (Electric Air Taxi) அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா பரிசோதித்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் கலிபோர்னியாவில் ஜோபி ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் eVTOL என்ற எயார் டாக்சியை வைத்து நடக்கும் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்தால், மக்கள் வேகமாக பயணிக்கவும், சரக்குகளை எளிதாக எடுத்துச் செல்லவும் மற்றொரு மார்க்கமாக இது அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர் வரும் 10 ஆம் திகதி வரை, eVTOL எயார் டாக்சியின் செயல்திறன் உள்ளிட்டவற்றை ஆராய உள்ள நாசா, Advanced Air Mobility National Campaign-னின் ஒரு திட்டமாக இந்த ஏர் டாக்சி சோதனைகளை நடத்துவதாக தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025