2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

பயனாளர்களை அச்சுறுத்தும் WhatsApp Pink

Editorial   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற செயலியாக வட்ஸ்அப்(whatsapp) காணப்படுகின்றது. இச் செயலியின் மூலம் இலகுவாக அழைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிவதுடன் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் விரைவாக ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகின்றது.

இந் நிலையில்அண்மைக்காலமாக  வட்ஸ்அப் செயலியை பின்க் நிறத்தில் பயன்படுத்தலாம் என்ற போலிச்செய்தியொன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் இந்த தகவலுடன் வட்ஸ்அப் பின்க் செயலியை பதிவிறக்கம் செய்யக் கூறி அதற்கான இணைய முகவரியும் வழங்கப்படுகிறது.

இதனை க்ளிக் செய்ததும், குறித்த  ஸ்மார்ட்போனில்  தீங்கு விளைவிக்கும் செயலி பதிவிறக்கம் செய்யப்படுவதாகவும் இதன் மூலம்   பயனாளர்களின்  விவரங்களை ஹக்கர்கள் திருடுவதாகவும் கூறப்படுகின்றது.

இந் நிலையில் குறித்த செயலிக்கும் வட்ஸ்அப்  நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என வட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ள​மை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .