A.K.M. Ramzy / 2021 ஜூன் 27 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

உடலில் ஒக்சிஜன் அளவு குறைந்தால், அதை அலைப்பேசியின் அலறல் மூலம் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும்வகையில், புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த க.முஹம்மது ஷாகுல் ஹமீத்.
25 வயது முஹம்மது ஷாகுல் ஹமீத், மின்னியல் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பொறியியல் முடித்துள்ளார். கடந்த ஆண்டு தனது படிப்பை முடித்த இவர், கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீட்டிலிருந்தபடியே பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கியுள்ளார். அதில் ஒன்றுதான் ஒக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனம் (Oxygen Alert Safety Device) .
கொரோனா இரண்டாம் அலையால் ஓக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பலர் உயிரிழந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளின் வெளியே அம்பியுலன்ஸ் வாகனங்கள் வரிசையாக நிற்பதை செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளத்திலும் பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. ஆகவே இதனை மையமாக கொண்டு ஒக்சிஜன் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனத்தை உருவாக்கினேன் என்கிறார் .
9 minute ago
15 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
57 minute ago