2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

நேருக்கு நேர் பார்க்க வேண்டாம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோபோக்களின் கண்களை சிறிது நேரம் பார்க்கும்போது மனிதர்களின் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பு ஏற்படுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரோபோக்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது எற்படும் உணர்வு விளக்கமுடியாததென்று கருதும் விஞ்ஞானிகள், அப்படி பார்க்கும்போது மனிதர்களுக்கு ஏற்படும் மாற்றதை ஆராய்ந்தனர்.இத்தாலியின் Istituto Italiano Di Tecnologia ஆராய்ச்சி மையத்தில் மனிதர்களுக்கு எதிரே ரோபோக்கள் அமர்த்தப்பட்டு வீடியோ கேம் விளையாட வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மனிதர்களின் மூளை சமிக்ஞைகள் EEG மூலம் பதிவுசெய்யப்பட்டது.

அதன் முடிவில், ரோபோக்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது, மனிதர்களுக்கு முடிவெடுக்கும் திறனில் தாமதம் ஏற்படுவது  கண்டறியப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .