2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

15 நிமிடங்களில் திறன்பேசியை முழுமையாக மின்னேற்றும் oppo

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 24 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்மில் பலர் oppo அலைபேசிகள் பற்றி கேள்விப்படாது இருக்கலாம். ஆனால், உலகில் பலரால் விரும்பப்படும் வசதியை oppo வழங்கவுள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் இடம்பெற்று வரும் மொபைல் வேள்ட் கொங்கிரஸில், தனது புதிய SuperVOOC விரைவு-மின்னேற்றும் தொழில்நுட்பத்தை காண்பித்துள்ளது.

சாதாரண பயன்பாட்டில் oppo கூறுவது போன்று நடைபெறுமானால், oppoவின் பாவனையாளர்கள், தமது சாதனங்களின் மின்கலங்களை வெறும் 15 நிமிடத்தில் முழுமையாக மின்னேற்றிக் கொள்ள முடியும். இது பொய்யில்லை இதுதான் உண்மை.

எதுவித மின்னேற்றமும் இல்லாமல் இருக்கும் 2,500mAH மின்கலத்தை நூறு சதவீதம் மின்னேற்றுவதற்கு வெறும் பதினைந்து நிமிடங்களே தேவைப்படும் என oppo தெரிவித்துள்ளது. மேற்படித் தொழில்நுட்பமானது, வழமையான micro-USB, USB Type-C கேபிள்களிலேயே இயங்கவுள்ளது.

Snapdragon 820 chipset போன்றவற்றை பயன்படுத்தி மின்னேற்றும் Qualcomஇன் புதிய Quick Charge 3.0 இல் எதுவித மின்னேற்றமும் இல்லாத மின்கலத்தை 35 நிமிடங்களில் 80 சதவீதமான மின்னேற்றத்தை பெறமுடியும் என்ற நிலையில், மேற்கூறப்பட்ட oppoவின் தொழில்நுட்பம் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .