Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 16 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீப்பற்றுகின்ற மின்கலங்கள் காரணமாக, தனது Galaxy Note 7 திறன்பேசிகளை மீள ஒப்படைக்குமாறு பயனர்களைக் கோரியுள்ள சம்சுங் எலெக்ட்றோனிக்ஸ் நிறுவனம், Galaxy Note 7 சாதனங்களின் மின்கல மின்னேற்றத்தை, 60 சதவீதத்தால் மட்டுப்படுத்துகின்ற மென்பொருள் இற்றைப்படுத்தலை, தென்கொரியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தனது தயாரிப்புத் திறனுக்காக, பெருமை கொள்கின்ற, உலகின் மிகப்பெரிய திறன்பேசித் தயாரிப்பாளரான சம்சுங், முன்னொருபோதும் இல்லாத வகையில், Galaxy Note 7 திறன்பேசிகளை மீளப் பெற்றமைக்காக மன்னிப்புக் கோரும் விளம்பரங்களை தென்கொரியாவில் பிரசுரித்தமையைத் தொடர்ந்தே மேற்கூறப்பட்ட நகர்வை மேற்கொண்டுள்ளது.
எவ்வாறெனினும், தென்கொரியாவைத் தவிர்த்து, ஏனைய சந்தைகளில், Galaxy Note 7 மின்கல மின்னேற்றத்தை கட்டுப்படுத்துகின்ற மென்பொருள் இற்றைப்படுத்தல்களை மேற்கொள்ளுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என சம்சுங்கின் பேச்சாளர் பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தானாகவே இடம்பெறவுள்ள மென்பொருள் இற்றைப்படுத்தலானது, தென்கொரிய நேரப்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை இரண்டு மணிக்கு மேற்கொள்ளப்படும் என்று அறிக்கையொன்றில் சம்சுங் தெரிவித்துள்ளது.
தென்கொரியா, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட 10 சந்தைகளில், 2.5 மில்லியன் Galaxy Note 7 திறன்பேசிகளை சம்சுங் விற்றுள்ள நிலையில், அவை மீளப்பெறப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல், பாதுகாப்பான மின்கலங்களுடன் பிரதியீட்டு திறன்பேசிகளை தென்கொரியாவில் வழங்க சம்சுங் திட்டமிட்டுள்ளது.
எனினும், ஒழுங்குபடுத்துநர்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்களால், உலகம் முழுவதும் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான எச்சரிக்கைகள் காரணமாக, Galaxy Note 7-இன் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருந்த நிலையில், சம்சுங்கின் பங்குகள் வீழ்ச்சியடைந்திருந்தன.
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025