Shanmugan Murugavel / 2016 மே 12 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செயலியின் மூலம் வினவப்படக்கூடிய சக்கரக்கதிரைகளுக்கான வாகனங்களை ஊபர் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய வசதி ஆனது UberWav என்று அழைக்கப்படுவதுடன் தற்போது இது பாவனைக்கு வந்துள்ளதாக ஊபர் தெரிவித்ததுடன், UberX இன் கட்டணங்கள் போல குறைந்த கட்டணங்களையே கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊபருக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அண்மையில் பரிசீலித்த ஐக்கிய இராச்சியத்தின் நகரசபை உறுப்பினர்கள், சக்கரக்கதிரை பயனர்களுக்கான தெரிவைக் கொண்டிருந்ததா என ஆராய்ந்திருந்தனர்.
மேற்படி புதிய சேவை அபிவிருத்தியில், அங்கவீனமற்றவர்களுக்கான தொண்டு நிறுவனங்களான Scope, Whizz-Kidz, Transport for All ஆகியன பங்கெடுத்திருந்தன. இந்நிலையில், மேற்படி தயாரிப்பை விரிவுபடுத்துவதற்காக முதல் 18 மாதங்களில் ஒரு மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு அதிகமாக முதலிட்டுள்ளதாக ஊபர் தெரிவித்துள்ளது.
மேற்கூறப்பட்ட வாகனத்தில், சக்கரக்கதிரை பயனருடன் மேலதிகமாக ஒரு பயணி செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வகையான 55 வாகனங்கள் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஊபரின் பேச்சாளர் ஒருவர், எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை 100க்கு அதிகமானதாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல நகரங்களில் சக்கரக்கதிரை பயனர்களுக்குரிய வாகனங்களை ஊபர் வழங்குவதில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே தற்போது இலண்டனில் அவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago