Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மைஸ்பேஸ் மற்றும் லிங்க்டினில் நிகழ்ந்த பாரிய மீறல்களுடன் தொடர்புபட்ட ஹக்கரினால், 200 மில்லியன் யாகூ கணக்குகளின் தகவல்கள், கறுப்புச் சந்தை இணையத்தளமொன்றில் பிரசுரிக்கப்பட்டாதாகக் கூறப்பட்டமை குறித்து யாகூ விசாரிக்கின்றது.
பயனர் பெயர்கள், கடவுச்சொல்கள் மற்றும் பிறந்த திகதி என்பன மூன்று பிட்கொய்ன்களுக்கு (1,360 ஸ்டேர்லிங் பவுண்கள்) விற்கப்படுகின்றது. Peace என்ற பெயரைப் பயன்படுத்தும் ஹக்கர், குறித்த தரவானது பெரும்பாலாக, 2012ஆம் ஆண்டிலிருந்து இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேற்கூறப்பட்ட விடயத்தை மிகவும் கவனமாக ஆராய்வதாகவும், என்ன விடயங்கள் இருக்கின்றன என்பது குறித்து கண்டுபிடிக்க பணியாற்றுவதாக யாகூ தெரிவித்துள்ளது.
தமது பயனர்களை பாதுகாப்பாக பேணுவதற்காக யாகூ கடினமாக உழைப்பதாகவும், உறுதியான கடவுச்சொல்லை உருவாக்குவதற்கு, பயனர்களுக்கு எப்போதும் ஊக்கமளிப்பதாகவும் அல்லது யாகூ கணக்கின் திறவுகோலைப் பயன்படுத்தி ஒன்றாக கடவுச்சொற்களை வழங்குவதாகவும் மற்றும் வெவ்வேறு இயக்குதளங்களில் வெவ்வேறு கடவுச்சொற்களை பயன்படுத்துவதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பிரசுரிக்கப்பட்ட கடவுச்சொற்கள் hash வடிவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அவை குழப்பமான வடிவிலேயே காணப்படும். எனினும் குறித்த hashக்கு பயன்படுத்தப்படும் வழிமுறையை ஹக்கர் பிரசுரித்துள்ளார்.
மேலே கூறப்பட்டதில் MD5 வழிமுறையே பயன்படுத்தப்பட்ட நிலையில், இது பலவீனமானதாகக் கருதப்படுவதுடன், பெரும்பாலான கடவுச்சொற்களை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். இத்தாக்குதலானது அகராதித் தாக்குதல் எனக் கூறப்படுகிறது.
எவ்வாறெனினும் அண்மைய வாரங்களிலும் மேற்கூறப்பட்டவாறு பாரிய தரவு மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதும், அவை போலியானவையாகவும் பழைய தரவுகளாயும் இருந்த நிலையில், இது குறித்து கவனம் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.
முதன்முறையாக, குறித்த தரவு மீறல் குறித்து Motherboard குறிப்பிட்டிருந்ததோடு, 5,000 பதிவுகளைக் கொண்டிருந்த சிறிய தொகுதி ஒன்றையும் பெற்றிருந்தது. இந்நிலையில், அவை உண்மையான கணக்குகளா என அது சோதித்திருந்தது.
அதில், முதலிரண்டு டசின் கணக்கான யாகூ பயனர்பெயர்களில் பெரும்பாலனவை சரியானவையாக இருந்திருந்தன. எனினும் அடுத்த 100க்கு மேற்பட்டவற்றை சோதிக்கும்போது, அவற்றில் பெரும்பாலன கணக்குகள் நிறுத்தப்பட்டதாக இருந்திருந்தன. எனவே அவை பழைய தரவுகள் என்பதை உணர்த்துவதாய் இருந்தது.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago