Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜனவரி 28 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன திறன்பேசி தயாரிப்பாளரான ஒப்போவின் நட்சத்திர அந்தஸ்து அதிகரித்து வருகையில், முழுமையான 2015ஆம் ஆண்டில், 50 மில்லியன் திறன்பேசிகளை விற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஒப்போ நிறுவனம், கடந்த வருடத்தில் மாத்திரம் 67 சதவீத, விற்பனை வளர்ச்சியைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்தடவையாக, உலகின் முதல் பத்து திறன்பேசி நாமங்களுக்குள் வந்துள்ள ஒப்போ, மேற்படி உலகின் முதல் பத்து திறன்பேசி நாமங்களில் எட்டாவது இடம் வகிப்பதுடன், உலகளாவிய ரீதியில், திறன்பேசிகளில் 3.8 சதவீதமான திறன்பேசிகள், ஒப்போ திறன்பேசிகளாக இருக்கின்றன.
இந்த 2016ஆம் ஆண்டில், இந்தியாவே தனது பிரதான இலக்கு எனத் தெரிவித்துள்ள ஒப்போ, இவ்வருட இறுதிக்குள் தனது விற்பனையை 300 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளது.
முடிவடைந்த 2015ஆம் ஆண்டில் 70 மில்லியனுக்கு மேற்பட்ட திறன்பேசிகளை விற்றுள்ளதாக ஸியோமி தெரிவித்திருக்கின்ற நிலையிலும் நூறு மில்லியனுக்கு அதிகமான திறன்பேசிகளை, முடிவடைந்த 2015 ஆம் ஆண்டில் விற்றுள்ளதாக ஹுவாவி தெரிவித்துள்ளபோதிலும், திறன்பேசிச் சந்தையில், முன்னணி தயாரிப்பு ஜாம்பவான்களாக அப்பிளும் சம்சங்குமே விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
43 minute ago
50 minute ago