Shanmugan Murugavel / 2016 மே 05 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகைப்படங்களை பகிரும் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமிலுள்ள பாதுகாப்புக் குறைபாடொன்றை பத்து வயதான ஜானி எனப்படும் பின்லாந்துச் சிறுவனால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவனுக்கு 10,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக, இன்னொரு மூன்று வருடங்களுக்கு இன்ஸ்டாகிராமில் இணைய முடியாத மேற்படி சிறுவன், ஏனைய பயனர்களால் இன்ஸ்டாகிராமில் பதியப்படும் கொமென்ட்களை அவனால் அழிக்கக்கூடிய bug ஒன்றைக் கண்டுபிடித்திருந்தான்.
எனினும் மேற்படி பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், விரைவாக அது சரிசெய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராமை ஆளும் சமூகவலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, bugஐ கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுத்தொகையை ஜானி பெற்றிருந்தான். இவ்வாறு பரிசுத் தொகையை பெறும் மிகக் குறைந்த வயதானவன் ஜானி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம், மேற்படி பாதுகாப்புக் குறைபாட்டை கண்டுபிடித்திருந்த ஜானி, அதை பேஸ்புக்குக்கு மின்னஞ்சல் செய்திருந்தான். இதனையடுத்து, ஜானிக்கு ஒரு சோதனைக் கணக்கை வழங்கிய பேஸ்புக்கின் பாதுகாப்பு பொறியியலாளர்கள் அப்பாதுகாப்புக் குறைபாட்டை நிரூபிக்குமாறு கோரியிருந்த நிலையில் அதை ஜானி நிரூபித்துக் காட்டியிருந்தார்.
இதேவேளை, கிடைக்கப் பெற்ற பணத்தினை வைத்து, தனது சகோதரர்களுக்கு புதிய மோட்டார் சைக்கிளையும் கால்பந்தாட்ட உபகரணங்களையும் கணினிகளையும் வாங்கவுள்ளதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
இந்நிலையில், 2011 தொடக்கம், 4.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டுபிடித்தற்காக வழங்கியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago