Super User / 2010 ஜூலை 15 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ரயிலின் வேகம் மாத்திரமல்ல, தோற்றமும் வசதிகளும்கூட வியக்க வைப்பதாக இருக்குமாம்.
விமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த ரயில் வடிவமைக்கப்படவுள்ளது. மிகவும் பளபளப்பாகவும் காண்போர் கண்களை கவரும் வகையிலும் உள்ள இந்த ரயில் தண்டவாளத்தில் ஓடும் கொன்கோர்ட் என வர்ணிக்கப்படுகிறது.
ஆடம்பர குடியிருப்புக்களில் உள்ளதைப் போன்ற வசதியான மென் பஞ்சு விசாலானமா சாய்விருக்கைகள், மிருதுவான மேசை மற்றும் நாற்காலிகள், காற்றோட்ட வசதிகளுடனும் கணினி திரைகளுடனும் அமைக்கப்பட்டுள்ள தனியான கண்ணாடிக் கூண்டுகள் இந்த ரயிலில் உள்ளன.

அத்துடன் சைக்கிள்களை மடித்து வைப்பதற்கென்ற இடம், மதுபானம் அருந்தும் வசதிகள் ஆகியவையும் உள்ளன. திரைப்படம் பார்ப்பதற்கும் இசைகளை கேட்டு மகிழவும் மாத்திரமல்லாமல் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் உள்ளன.
பிரான்ஸ், ஜப்பான் மற்றும் சீனாவிலும் தற்போது இது போன்ற ரயில்கள்; புழக்கத்தில் உள்ளதாகவும் இந்த நாடுகளுடன் போட்டியிட வேண்டுமானால் பிரிட்டனும் இது போன்ற ரயில் சேவைகளை அதிகம்
பயன்படுத்த முன்வர வேண்டும் எனவும் இந்த ரயிலின் வடிவமைப்பாளர் போல் பிரிஸ்ட்மன்.
விமானத்துறையில் கொன்கோர்ட் விமானங்கள் ஏற்படுத்திய தாக்த்தைப் போன்று ரயில்வே துறையில் இந்த நவீன ரயில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என பிரீஸ்ட்மன் கூறுகிறார்.

இதேவேளை லிவர்பூல் நகரில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய பிரித்தானிய போக்குவரத்து செயலர் பிலிப் ஹம்மொந்த், தற்போதைய பிரித்தானிய கூட்டணி அரசாங்கத்தின் உறுதிமொழிகளில் ஒன்றான அதி நவீன விரைவு ரயில் சேவை நிச்சயம் ஏற்படுத்தப்படும் எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாவனைக்கு வந்தால் லண்டன் எஸ்டனிலிருந்து பேர்மிங்ஹாம் நகரை 49 நிமிடங்களில் சென்றடைந்துவிடலாமாம். தற்போது இப்பயணத்திற்கு ஒரு மணித்தியாலமும் 24 நிமிடங்களும் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

14 minute ago
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
58 minute ago