A.P.Mathan / 2010 ஜூலை 28 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஹொலிவுட்டின் பிரமாண்டங்களுக்கும் பிரதான விளையாட்டு நிகழ்வுகளுக்கும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த முப்பரிமாண புரட்சி வீடுகளுக்கும் விரைவில் நுழைந்துவிடும்.
குழந்தையின் முதல் நடை, பல்கலைக்கழக பட்டமளிப்பு போன்ற வாழ்வின் பெறுமதிமிக்க நிகழ்வுகளை முப்பரிமாணத்தில் பதிவு செய்யக்கூடிய முதலாவது முப்பரிமான கெமராவை பனசோனிக் நிறுவனம் தயாரித்துள்ளது.
எமக்கு இரண்டு கண்கள் இருப்பது போலவே, 3D கெமராவிலும் இரண்டு வில்லைகள் உள்ளன. முப்பரிமாண கெமெரா, அருகருகே அமைந்த வில்லைகள் ஊடாகப் பெறப்படும் படங்களை இணைத்து முப்பரிமாண படங்களை உருவாக்குகிறது. இதன்போது 3D கமெரா மனித மூளை போலத் தொழிற்படுகிறது.
சோனி நிறுவனம் முப்பரிமாண தனிப்படங்களை மட்டும் எடுக்கக் கூடிய 3D கெமராவை உருவாக்கியுள்ளது. பனசோனிக் நிறுவனம் தயாரித்துள்ள 3D கெமராவின் விலை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகும். இந்த முப்பரிமாண கமெராவை அடுத்த மாதமளவில் சந்தைக்கு விட, பனசோனிக் நிறுவனம் உத்தேசித்திருக்கிறது.


14 minute ago
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
58 minute ago