A.P.Mathan / 2012 மார்ச் 20 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட அப்பிளின் 'புதிய ஐபாட்' காரணமாக விற்பனையில் சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப்பிள் நிறுவனமும், ஏரீ அன்ட் ரீ நிறுவனமும் அறிவித்துள்ளன.
ஏரீ அன்ட் ரீ நிறுவனம் நேற்று திங்கட்கிழமை விடுத்த அறிவிப்பில் ஒருநாளில் அதிக கருவிகள் அக்டிவேட் செய்யப்பட்ட சாதனையை அப்பிளின் “புதிய ஐபாட்“ படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட “புதிய ஐ பாட்“ காரணமாக அப்பிள் நிறுவனம் மாத்திரமன்றி தொலைபேசி நிறுவனமாக ஏரீ அன்ட் ரீ நிறுவனமும் பாரிய இலாபத்தைச் சம்பாதித்துள்ளது.
எனினும் எந்தளவான விற்பனை, எந்தளவிலான சாதனை என்பது குறித்து அந்நிறுவனம் தகவல்களை வெளியிடவில்லை.
இதேவேளை அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிம் குக் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் காணப்பட்ட விற்பனைச் சாதனைகளை விட “புதிய ஐ பாட்“ அதிக விற்பனைச் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அப்பிள் நிறுவனமும் தெளிவான புள்ளிவிபரங்களை வெளியிடாத போதிலும், “ஐபாட் 2“ கருவி அறிமுகப்படுத்தப்பட்டபோது வார இறுதிநாட்களில் ஒரு மில்லியன் கருவிகள் விற்பனை செய்யப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக “புதிய ஐ பாட்“ கருவி அதனைவிட அதிகளவில் விற்பனையாகியிருக்கும் எனக் கருதப்படுகிறது.
அதிகளவு இலாபத்தைச் சம்பாதித்துள்ள அப்பிள் நிறுவனம், 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை பங்குதாரர்களுக்குரிய இலாபமாகவும், பங்குகளை திரும்ப வாங்குவதற்குமாகச் செலவிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயற்றிட்டம் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது. (க்ரிஷ்)
42 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
59 minute ago
1 hours ago