2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

2023 இன் முதலாவது ஹைபிரிட் சூரிய கிரகணம்

Editorial   / 2023 ஏப்ரல் 20 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்றைய தினம்(20) தோன்றியது. இலங்கையில் அது தென்படவில்லை. எனினும், சிங்கபூர் மற்றும் மலேசியாவில் தென்பட்டுள்ளது.  

இது நிங்கலூ சூரிய கிரகணம் (Ningaloo Solar Eclipse) அல்லது ஹைபிரிட் சூரிய கிரகணம் (Hybrid Solar Eclipse ) என வானியல் அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு 'சூரிய கிரகணம்' என அழைக்கப்படுகின்றது.

சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது 'முழு சூரிய கிரகணம்' எனவும் ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது 'பகுதி சூரிய கிரகணம்' எனவும் குறிப்பிடப்படுகிறது. 

இந்த 'ஹைபிரிட் சூரிய கிரகணம்' ஓர் அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஹைபிரிட் சூரிய கிரகணமானது, இன்று(20) காலை 7.04 முதல் நண்பகல் 12.29 வரை நிகழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .