2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

432MP கேமரா சென்சார் உருவாக்கும் சாம்சுங்

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாம்சுங் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிகபட்சம் 432MP கேமரா சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுவரை அறிமுகமான சாம்சுங் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் அதிகபட்சம் 200MP கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சுங் நிறுவனம் இரண்டு 432MP சென்சார்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவை ISOCELL HW1 மற்றும் HW2 பிராண்டிங் கொண்டிருக்கின்றன. இவை இரண்டும் 1-இன்ச் சென்சார்கள் ஆகும். 108MP மற்றும் 200MP சென்சார்கள் வரிசையில், சாம்சுங் செமிகண்டக்டர்ஸ் நிறுவனம் சற்றே அளவில் பெரிய சென்சார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

டிப்ஸ்டர் ரெவக்னஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சுங் நிறுவனம் உருவாக்கி வரும் ISOCELL HW1 மற்றும் HW2 சென்சார்கள் இரண்டும் 432MP ரெசல்யூஷன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெக்சா ஸ்கொயர் டிரேட்மார்க் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருந்தது. இவற்றில் 36:1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.

புதிய 432MP சென்சாரின் உற்பத்தி அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 2025 அல்லது 2026-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி S சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களில் 432MP சென்சார் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .