2025 மே 10, சனிக்கிழமை

Adblockersஐ இலக்கு வைக்கிறது பேஸ்புக்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்க்டொப் கணினிகளில் பேஸ்புக்கை பார்வையிடுவோர் கட்டாயமாக விளம்பரங்களை பார்வையிடும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள பேஸ்புக், விளம்பரங்களைத் தடுக்கும் மென்பொருள்களுக்கு எச்சரிக்கையை வழங்கியுள்ளது.

விளம்பரங்களின் வருமானத்திலேயே தங்கியுள்ள இணைய வர்த்தகங்களுக்கு, பிரபலமடைந்து வரும் விளம்பரத் தடுப்பு மென்பொருள்கள் ஆபத்தாக உள்ளன.

இந்நிலையில், விளம்பரங்கள் எவ்வளவு எரிச்சலூட்டுபவை என தாம் உணர்ந்துள்ளதாக பயனர்களுக்கு தெரிவித்துள்ள பேஸ்புக், பயனர்களின் முகப்புக்களில், எவ்வகையான விடயங்கள் வரவேண்டும் என்பதை கட்டுப்படுத்துவதற்கான, மேம்படுத்தப்பட்ட கருவிகளை பயனர்களுக்கு வழங்குவதற்கு பேஸ்புக் உறுதியளித்துள்ளது.

மேலும் சக்திவாய்ந்த கட்டுப்பாடுகளை மக்களுக்கு தாங்கள் வழங்கும் அதேவேளை, தற்போது விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் மென்பொருள்களை பயன்படுத்துவோருக்கு, டெஸ்க்டொப் கணினிகளில் பேஸ்புக்கை பயன்படுத்துவோருக்கு, விளம்பரங்களைக் காண்பிக்க ஆரம்பித்துள்ளதாக பேஸ்புக்கினுடைய விளம்பரப் பிரிவின் உப தலைவரான அன்ரூ பொஸ்வேர்த் வலைப்பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், என்ன வகையான வர்த்தக நாமம் மற்றும் வர்த்தகங்களை பயனர்கள் முன்னிலைப்படுத்துகின்றனர் என்பதைத் தெரிவு செய்வதன் மூலம், குறிப்பிட்ட வகையான விளம்பரங்களை மாத்திரம் பயனர்கள் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்குக்கு அதிக பார்வையிடுதல்களை வழங்குகின்ற அலைபேசி சாதனங்களில் வழமையான விளம்பரங்களைத் தடுக்கும் மென்பொருள்கள் இயங்குவதில்லை என்றபோதும், பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விளம்பரங்களை பார்வையிடுவதிலிருந்து தடை செய்கிறது.

இறுதியாக முடிவடைந்த காலாண்டில், விளம்பரங்களின் மூலம் 6.2 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வருமானத்தை பேஸ்புக் ஈட்டியிருந்தது.

உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 200 மில்லியன் பேர், தமது கணினிகளில் விளம்பரங்களைத் தடுக்கும் மென்பொருள்களை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கினுடைய மேற்படி நடவடிக்கையின் மூலம், விளம்பர வருமானங்களின் தங்கியிருக்கும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கும் தேவையில்லாத விளம்பரங்களை தடுக்க முயற்சிக்கும் பயனர்களுக்கிடையேயான விவாதத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

தனது பயனர்கள், தமது பேஸ்புக் கணக்கில் என்ன பார்வையிடுகின்றனர் என்பதை பேஸ்புக் கட்டுப்படுத்துவது இது முதன்முறையல்ல. இம்மாத ஆரம்பத்தில், ஒரு கட்டுரையில் உள்ள விடயத்தினை விட அதை விறுவிறுப்பாக்கிக் காட்டுவதற்காக வழங்கப்படும் தலையங்கங்களை கட்டுப்படுத்தியிருந்தது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X