2021 மே 08, சனிக்கிழமை

COVID-19 போலித் தகவல்களைக் கட்டுப்படுத்த WHO, Rakuten Viber நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

COVID-19 தொற்று தொடர்பில் பரப்பப்படும் போலித் தகவல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனம் , Rakuten Viberஆகியன கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளன. உலகளாவிய ரீதியில் பல மொழிகளில் இயங்கும் chatbot ஐ அறிமுகம் செய்துள்ளன. இந்த bot இனூடாக, போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்துவது இலக்காக அமைந்துள்ளது.

துல்லியமான சுகாதார தகவல்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் மக்களுக்கு உதவும் வகையில், இந்த chatbot தற்போது ஆங்கிலம், அரபிக், ரஷ்யன் ஆகிய மொழிகளில் காணப்படுவதுடன், விரைவில் 20 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்படும். பொதுவாக கேட்கப்படும் வினாக்களையும், உலகளாவிய ரீதியிலான நோய்த் தொற்றுடன் தொடர்புடைய பிந்திய தகவல்களையும் வழங்குவதாக அமைந்திருக்கும்.

”Latest News” எனும் பகுதி உலக சுகாதார ஸ்தாபனத்தின் இணையப் பக்கம் மெருகேற்றப்படும் போது, உடனுக்குடன் பதிவேற்றப்படும். உங்கள் கைகளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய செய்திகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதர பிரதான பிரிவுகளில் “Protect Yourself,” “Mask usage,” “Travel recommendations”மற்றும் வைரஸ் தொடர்பான உங்களின் அறிவை பரிசோதித்துக் கொள்ளக்கூடிய “Myths”புதிர் பகுதி போன்றனவும் இதில் அடங்கியுள்ளன. “Donate Now” என்பதனூடாக, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் COVID-19 Solidarity Response Fund க்கு நன்கொடை வழங்க முடியும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. டெட்ரொஸ் அதனம் கெபெரெய்சஸ் கருத்துத் தெரிவிக்கையில், ”புத்தாக்கமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக இயலுமானவரை பெருமளவான மக்களை சென்றடைவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் திட்டமிட்டுள்ளது. தகவல் சக்தி வாய்ந்தது என்பதுடன், இந்த உலகளாவிய ரீதியிலான நோய்த் தொற்று பரவும் காலப்பகுதியில் பல உயிர்களை காத்திட உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

Rakuten Viber. இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜமெல் அகௌவா கருத்துத் தெரிவிக்கையில், ”மக்களுக்கு தமது அன்புக்குரியவர்களுடன் இணைந்திருப்பதற்கான உதவிகளை நாம் வழங்குவதுடன், போலித் தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்துவதற்காக உலகளாவிய ரீதியில் அரசாங்கங்கள் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த முகவர் அமைப்புகளுக்கு முக்கியமான பதிவேற்றங்களையும் வழங்குகின்றோம்.  Rakuten Viber மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன இணைந்து இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆரோக்கியமாக உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. chatbot ஐ நீங்கள் பயன்படுத்தி உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு நீங்களும் பங்களிப்பு வழங்குங்கள். டிஜிட்டல் பாதுகாப்பானது.” என்றார்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் சகல Viber பாவனையாளர்களுக்கும் இந்த  chatbot ஏற்கனவே இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் சகல சுகாதாரத் துறைசார் அதிகாரிகள் மற்றும் முடக்கப்பட்டுள்ள நகரங்களைச் சேர்ந்த மக்களை ஊக்குவித்து, அவர்களை அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் வைத்திருக்கும் வகையில் Viber விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் பெக்கை அறிமுகம் செய்கின்றது. Viber இன் ஸ்டிக்கர் மார்கெட்டிலிருந்து இந்த பெக்கை பதிவிறக்கம் செய்து கொண்ட சகல பாவனையாளர்களுக்கும், chatbot ஐ இலகுவாக அணுகக்கூடியதாக இருக்கும். https://vb.me/c6e9fa எனும் இணையத்தளத்தினூடாக bot ஐ பெற்றுக் கொள்ளவும் முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X