Editorial / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல இலத்திரனியல் சாதனங்களின் உற்பத்தி நிறுவனமான எல்ஜி (LG ) தமது ஸ்மாட் தொலைபேசிகளின் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
சுமார் 6 வருடங்களில் குறித்த நிறுவனம் தொலைபேசிகளின் வணிகத்தில் 4.5 பில்லியன் டொலர்கள் இழப்பை சந்தித்துள்ளமையே இதன் காரணமாக தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதிக்குள் ஸ்மார்ட் தொலைபேசிகளின் வணிகத்திலிருந்து முற்றாக விலகி விடுவதாகவும் எனினும் தற்போதுள்ள சில மொடல்கள் சந்தையில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் ஸ்மார்ட் தொலைபேசிகளின் வியாபாரச் சந்தையிலிருந்து விலகிய முதல் பிரபல நிறுவனம் என்ற பெயரை எல்ஜி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு இருப்பினும் எல்ஜி நிறுவனத்தின் இம் முடிவானது ”மின்சார வாகனக் கூறுகள், இணைக்கப்பட்ட சாதனங்கள், ஸ்மார்ட் வீடுகள், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் தயாரிப்பிலும் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் வளங்களை மையப்படுத்த உதவும் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் எல்ஜி தனது ஸ்மார்ட் தொலைபேசிகளின் நிபுணத்துவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதோடு, 6 ஜி போன்ற இயக்கம் தொடர்பான தொழில்நுட்பங்களில் ஏனைய நிறுவனங்களுடன் உள்ள போட்டித்தன்மையை மேலும் வலுப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago