Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 17 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெயினின் பார்சிலோனாவில் இடம்பெறவுள்ள 2016ஆம் ஆண்டின் மொபைல் வேர்ல்ட் கொங்கிரஸில் LGயானது தனது புதிய திறன்பேசியை LG G5ஐ காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தென்கொரிய அலைபேசித் தயாரிப்பு நிறுவனமான LGயானது, G4 Stylusஇன் தொடர்ச்சியான LG Stylus 2ஐ2016ஆம் ஆண்டின் மொபைல் வேர்ல்ட் கொங்கிரஸில் வெளியிடவுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை (16) அறிவித்துள்ளது.
கடந்த வருடம் மே மாதத்தில் வெளியிடப்பட்ட G4 Stylusஐ போன்றே 5.7 அங்குல திரை கொண்டதாக LG Stylus 2 அமையவுள்ள போதிலும் அதன் தடிப்பைச் சிறிதளவு குறைத்துள்ளது. G4 Stylusஇன் தடிப்பு 9.4 மில்லிமீற்றராக அமைந்த நிலையில், LG Stylus 2 இன் தடிப்பு 9.4 மில்லிமீற்றராக அமையவுள்ளது.
தவிர, G4 Stylusஇன் நிறை 163 கிராமாக இருந்திருந்த நிலையில், தற்போதைய LG Stylus 2இன் நிறையானது 145 கிராமாக அமைந்துள்ளது. மிக மெல்லியதாக இருந்தாலும் நினைவகத்தை அதிகாரிக்கும் பொருட்டு SD cardஐ கொண்டிருப்பதுடன், அகற்றக்கூடிய 3,000mA மின்கலத்தையும் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னைய G4 Stylusஇல் rubber-tipped pen காணப்பட்ட நிலையில், தற்போதைய LG Stylus 2இல் nano-coated tip pen காணப்படுகிறது. இதன்மூலம், இலகுவாக குறிப்பெடுத்துக்கொள்ள முடியும் என்பதுடன் இது, இலகுவான வரையும் அனுபவத்தையும் வழங்குகின்றது.
இது தவிர, அலைபேசியும் stylus-உம் பிரிவடைவதை தடுக்கும் பொருட்டு, stylus ஆனது அதன் வழமையான இடத்தில் இல்லாத பட்சத்தில், அலைபேசியில் எச்சரிக்கைச் செய்தி கிடைக்கப்பெறும் வசதியையும் இந்த LG Stylus 2 கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேற்படி LG Stylus 2 ஆனது அன்ட்ரொயிட்டின் ஆறாவது பதிப்பான Marshmallowவில் இயங்கவுள்ளதுடன் 1.2GHz Quad-Core chipஐயும் 1.5GB RAMஐயும் 16GB உள் நினைவகத்தையும் கொண்டமைந்துள்ளதுடன் 13MP பிரதான கமெராவையும் 8MP முன்பக்க கமெராவையும் கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
LG Stylus 2-இன் விலை தொடர்பாக, எந்தவித உறுதிப்படுத்தலும் வழங்கப்பட்டிருக்காத நிலையில், இதன் விலையானது மத்திம ரீதியில் இருக்கும் என LG தெரிவித்துள்ளது.
16 minute ago
30 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
46 minute ago
57 minute ago