2025 மே 03, சனிக்கிழமை

OTTOவின் சாரதியில்லாத லொறிகள்

Shanmugan Murugavel   / 2016 மே 18 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுள், திறன்பேசித் தயாரிப்பு ஜாம்பவானான அப்பிள், மின் கார் தயாரிப்பு ஜாம்பவானான டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்கள் குழுவொன்று, வர்த்தக லொறிகளை தானாகச் செலுத்தப்படும் வாகனங்களாக மாற்றுவதை இலக்கு வைத்து தொடக்கநிலை நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளது.

ஆரம்பத்திலிருந்து வாகனங்களை உருவாக்குவதற்கு பதிலாக, ஏற்கெனவே உள்ள லொறிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, தானாகச் செலுத்தப்படும் லொறிகளை OTTO தயாரிக்கவுள்ளது.

தானாக நிதியளிக்கப்படுவதாக இருக்கும் OTTO தொடக்கநிலை நிறுவனமானது, தானியக்கமான கார்கள் சாதாரண பாவனைக்கு வரும் முன் தானியக்கமான லொறிகள் பாவனைக்கு வரும் என OTTO பந்தயம் கட்டியுள்ளது.

எவ்வாறெனினும் நெடுஞ்சாலைகள் தவிர்ந்த ஏனைய வீதிகளில் லொறிகள் செல்லும்போது சாரதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தானாகச் செலுத்தப்படும் தொழில்நுட்பத்தை ஐக்கிய அமெரிக்காவின் நெடுஞ்சாலைகளில் அறிமுகப்படுத்துவது ஏனைய வீதிகள், ஏனைய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுவதையும் விட இலகுவானதாக காணப்படுகிறது.

இருந்தபோதிலும் முதலில் எந்த மாதிரியான லொறிகள் பாவனைக்கு வருமென்றும் அவற்றின் பெறுமதி தொடர்பான தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை.

OTTOவின் வடிவமைப்பில் கமெரா, றாடர், lidar உணரிகள் உள்ளடங்கலான அமைப்பு காணப்படுவதுடன் அதன் மூலம் வாகனமானது தடத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவுகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு வேகத்தில் செல்ல முடியுமென்பதோடு தேவையான நேரத்தில் வேகத்தை குறைக்கவும் வாகனத்தை நிறுத்தவும் முடியும். எனினும் வேறொரு தடத்துக்கு மாறுவது தற்போது வரை சாத்தியமில்லாது உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X