Shanmugan Murugavel / 2016 ஜனவரி 02 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருடம் ஐக்கிய அமெரிக்காவில் தனது அலைபேசிக் கட்டணச் சேவையை விரிவுபடுத்த சம்சுங் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், இணையம் மூலம் தனது பயனர்கள் கொள்வனவு மேற்கொள்ள அந்நிறுவனம் அனுமதிக்கப்படவுள்ளதுடன், மேலும் பல திறன்பேசிகள், இலத்திரனியல் walletக்கு ஒத்துழைக்கவுள்ளன.
மேற்படிச் சேவையானது உயர்ந்த விலையுடைய Galaxy Note 5, the Galaxy S6 Edge, Galaxy S6, S6 Edge Plus உள்ளடங்கலான சாதனங்களில் தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அடுத்த வருடம் குறைந்த விலையுடைய சம்சுங் அலைபேசிகளிலும் இச்சேவை கிடைக்கும் என Samsung Payயின் பூகோள துணைப் பொது முகாமையாளர் தோமஸ் கோ, நேர்கானல் ஒன்றில் தெரிவித்துள்ளார். எனினும் ஏனைய நாடுகளுக்கு எப்போது இச்சேவை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டிருக்கவில்லை.
அமெரிக்காவில் கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி தமது சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் Samsung Pay ஆனது, தனது போட்டியாளர்களான Apple Pay, Android Payயை விட ஒரு படி முன்னுக்கு சென்றிருந்ததுடன், தற்போது இணையம் மூலமான கட்டணங்களை அனுமதிப்பதன் மூலம், PayPal போன்றவற்றுக்கு போட்டியை வழங்கவுள்ளது.
அமெரிக்காவில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல் நான்கு வாரங்களில் ஒரு பயனர், நான்கு பரிமாற்றங்களை மேற்கொள்வதாக கடந்த ஒக்டோபர் மாதம் Samsung Pay தெரிவித்திருந்தது.
16 minute ago
30 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
46 minute ago
57 minute ago