Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள பல வங்கிகளிலுள்ள வங்கிக்கணக்குகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சுமார் 20 மில்லியன் பவுண்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் இதனால், இணையத்தள வங்கியியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தங்களது கணக்குகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள வங்கிகளின் கணக்குகளின் விவரங்களை பெற்றுக்கொள்வதற்காக, ஒரு வகை வைரஸை இணைய குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று தேசிய குற்றப்பிரிவின் தெரிவித்துள்ளனர். இந்த இணையக்கொள்ளை காரணமாக ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு 20 மில்லியன் பவுண்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்ட பின்னர், ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கி கணக்குகளில் ஏற்பட்டு வைரஸ் தொற்று காரணமாக, வாடிக்கையாளர்களின் மின்னஞ்சலின்ஆவணங்கள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இணையத்தள வங்கியியலை பயன்படுத்தும் வாடிக்கையாளரகள், தற்போது கணக்குகளுக்குள் உட்புகுந்துள்ள வைரஸை அழிப்பதற்காக, CyberStreetWise மற்றும் GetSafeOnline ஆகிய இணையத்தளங்களுக்கு சென்று வைரஸ் தடுப்பு மென்பொருளை பதிவிறக்கம் (download) செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago