Editorial / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் மொபைல் வலையமைப்பு மற்றும் இணைய சேவையை வழங்கிவரும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக Verizon விளங்குகின்றது.
இந்நிறுவனம் இவ்வருட இறுதியில் இணைய வலையமைப்பில், 5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒன்றையும் அண்மையில் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தொழில்நுட்பத்தை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அனுசரணையுடனேயே அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் 5G தொழில்நுட்ப வலையமைப்பை பயன்படுத்துபவர்களுக்கு இரு இலவச சேவைகளை வழங்க முன்வந்துள்ளது.
இதன் அடிப்படையில் YouTube TV அல்லது Apple TV 4K சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், முன்னர் Houston, Sacramento, மற்றும் Los Angeles ஆகிய பகுதிகளில் இத் தொழில்நுட்பம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது Indianapolis உம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
25 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
2 hours ago