2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

YGC 5 அணி அறிமுகம்: GC அணியின் RAT

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 11 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வித்தியாசமான சிந்தனை, புத்தாக்கம் என்பதற்கு வடிவம் கொடுக்க எண்ணிய யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள், கணினி சுட்டிக்குப் பதிலாக RAT எனும் புது அமைப்பினை உருவாக்கி அளிக்கை செய்தனர்.

RAT ஆனது, உலகம் முழுவதும் உள்ள மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தம், பணியிட அழுத்தம் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அழுத்தம் குறைக்கும் இசை, வண்ணங்களை வெளிப்படுத்தும்.மேலும் உங்கள் சுட்டி, RAT நிலையில் இருக்கும் போது விளையாட்டுத்தனமாக  ஓடித்திரியும். அதைப் பிடிக்க முனைகையில், கையில்  இருந்து விலகிச்செல்லும்.

IoT எனும் வன்பொருள், மென்பொருளுடன் கூடிய இத்தொழில்நுட்பம், விந்தையான பல உற்பத்திகளுக்கு  தூண்டுகோலாக அமைகிறது. இது போன்ற ஒரு வித்தியாசமான சிந்தனை, GC அணியினை அனைவருக்கும் பிடித்தமான அணியாக மாற்யிருந்தது.

இப்படைப்பானது, Raspery pi, python நிரலாக்கி மொழி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. Image processing தொழில்நுட்பம் கொண்டு ஓடித்திரியும் RAT மேசையில் இருந்து தவறி விழாது தடுக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப த்துறையில் தொழில்புரியும் ஆயிரக்கணக்கான மென்பொறியிலாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். 5,000 ரூபாய்முதல் 10,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள RAT, வெகுவிரைவில் சந்தைக்கு வரும் என்பதில் ஐயமில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .