Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை முழுவதும் உள்ள விளம்பரப்பலகைகளை ஓரிடத்தில் வாங்கவும் வழங்கவும் கூடிய “adsconnect” எனும் இணையத்தளத்தினை வடிவமைத்திருந்த சிவராதன், கஸ்தூரிராஜன், விஜிதா ஆகியோரைக் கொண்ட Yarl coders அணி Yarl Geek Challengeஇன் ஐந்தாவது பருவகாலத்தின் மூன்றாமிடம் பெற்றிருந்தது.
இடஞ்சுட்டல், 360 Video, இணையத்தள தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி , விளம்பர உத்திகளில் மிகவும் பழமையான பெயர்ப்பலகை விளம்பரங்களை நவீனப்படுத்த உருவாக்கப்பட்டதொன்றாகும். குறித்த இணையத்தளத்தின் மூலம் பதாகைகள் உள்ள இடங்களைத் தெரிவுசெய்ய முடியுமென்பதுடன், அவ்விடங்களின் மக்கள் எண்ணிக்கை, நடமாட்டம் ஆகியவற்றை அறிந்து பதாகைகளை தெரிவு செய்யவும் முடியும். இது தவிர, பதாகை உள்ள இடத்தை 360 பாகை சுற்றிப்பார்க்கக்கூடிய வசதி இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
தொழில்முறையில் பதாகைகளை வடிவம் கொடுக்கும் நிறுவனங்களுடனான இவர்களது இணைப்பு இச்செயலியை முழுமையடையச் செய்கிறது . தெரிவு செய்தல் முதல் வாங்கி வடிவம் கொடுக்கும் வரை அனைத்து தேவைகளையும் ஒரு இடத்தில் இருந்தே செய்யக்கூடிய இப்படைப்பு வெகு விரைவில் சந்தைக்கு வரும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago