Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

வைத்தியர்களின் சந்திப்பு நேரம் பெறுவது முதல் மருத்துவச் சீட்டு பெறுவது வரை, பல தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய “CureMe” எனும் செயலியை வடிவமைத்திருந்த ரஜித், அதீச, விஸ்மித, டிலிக்க ஆகியோரைக் கொண்ட 404 அணி, Yarl Geek Challengeஇன் ஐந்தாவது பருவகாலத்தின் இரண்டாமிடத்தை பெற்றிருந்தது
இணையத்தளம், திறன்பேசி செயலிகளாக உருவாக்கப்பட்ட CureMe, Google Maps API,Ionic framework, இணையத்தள தொழில்நுட்பம் ஆகிய தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
CureMe அனைவருக்குமான ஒரு திறன்பேசிச் செயலி . ஒருவருடைய மருத்துவக் குறிப்புகள் , அனுமதிகள் , மருந்துப் பாவனை என அனைத்தயும் இலகுவில் அடையக்கூடியதாக உள்ள இவ்வமைப்பில், உணவுக்கட்டுப்பாட்டுமுறை ,மருத்துவக் கோப்புகள் என பல்வகையான அம்சங்களை வைத்தியர்களால் இலகுவாக பதிவேற்றவும் பார்வையிடக்கூடியதுமான இணையத்தளத்தையும் உள்ளடக்கியுள்ளது. மருத்துவக் குறிப்பு முதல் ஆலோசனை வரை அனைத்து வகையிலும் இணைப்பை ஏற்படுத்தும் இப்படைப்பு, சகலருக்கும் தேவையான ஓர் செயலியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை . மிகவும் முனைப்புடன் கூடிய இவ்வணி வெகுவிரைவில் இப்படைப்பைச் சந்தைப்படுத்த உறுதி கொண்டுள்ளது.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago