2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

Yarl Geek Challenge ஜூனியர் இறுதியில் 34 அணிகள்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 13 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதுக்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை ஊக்குவிப்பதுக்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் நிறுவனத்தால், வட மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge ஜூனியர் போட்டியின் இவ்வருடத்துக்கான வலய மட்ட மதிப்பீடுகள் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்று, இறுதிப் போட்டிக்கு 34 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதில், வடமராட்சி வலயத்திலிருந்து, ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த, எம்.தனுராஜ், ஐ.கிருபதாஸ், ஆர்.அபிராம் ஆகியோரை உள்ளடக்கிய ஹாட்லி லயன்ஸ் அணியும் எஸ்.மருசன், எஸ்.பரணீதரன், கே.ராகவன் ஆகியோரை உள்ளடக்கிய ஹாட்லி ஃபிரன்ஸ் அணியும் ஏ.கார்த்திகேயன், ஜி.துவாரகன், ஆர்.சுகந்தன் ஆகியோரை உள்ளடக்கிய ஹாட்லி சலஞ்ஜேர்ஸ் அணியும் ஏ.அனுஷ்னன், ஜி.அபிஷ்னன், ஏ.வாதவூரன் ஆகியோரை உள்ளடக்கிய ஹாட்லி மொபைல் அணியும் மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த ஆர்.லவண்யா பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தூசியாம்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

வலிகாமம் வலயத்திலிருந்து, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியைச் சேர்ந்த, எஸ்.கபிலன், எம்.நிரோஷன், கே.மயூதரன் ஆகியோரை உள்ளடக்கிய ஏ/எல் ஐ.சி.டி 2018 அணியும் எஸ்.நிராசன், கே.லோகிதன், எஸ்.ஸ்ரீமகேசன் ஆகியோரை உள்ளடக்கிய வட்டு கிங்ஸ் அணியும் டி.உதயகுமார், வி.ராகவன், எஸ்.மிதுஷன் ஆகியோரை உள்ளடக்கிய டபில்யு.டபில்யு,டபில்யு அணியும் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த, கே.சஞ்சீவன், கே.கபிலனை உள்ளடக்கிய மகாஜனன் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

யாழ்ப்பாண வலயத்திலிருந்து, இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த, எஸ்.தக்ஷாயினி, எம்.கிருபாலினி ஆகியோரை உள்ளடக்கிய ஜெ.எச்.சி.எல்-ஸ்டார்ஸ் அணியும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த, ஆர்.தர்சிகா, ஏ.சாரங்கி, ஏ.பி.விதுஜா ஆகியோரை உள்ளடக்கிய ஃபயர் அணியும் எஸ்.ஜான்சி, எம்.தனஜா, ஆர்.றமியா ஆகியோரை உள்ளடக்கிய றெட்ரோஸ் அணியும் எம்.சுகன்யா பிரதிநிதித்துவப்படுத்தும் லிட்டில் ஸ்டார் அணியும், இந்துக் கல்லூரியைச் சேர்ந்த, எம்.திருமதிகன், வி.பிவிந்ரன் ஆகியோரை உள்ளடக்கிய வோட்டர் டாங் மனேஜ்மன்ட் அணியும் எஸ்.கீதப்பிரியன், ஆர்.கனிஷ்கர், கே.கருசன் ஆகியோரை உள்ளடக்கிய கொலாட்ரல்ஸ் அணியும் பி.நிஷாங்கன், என்.ஆதவன், என்.மாதவன் ஆகியோரை உள்ளடக்கிய ஜெ.டி.ஐமன் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

தீவக வலயத்திலிருந்து, காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த, கே.கஜந்தன், எஸ்.தூயவன், கே.சிவதர்சன் ஆகியோரை உள்ளடக்கிய அணி இரண்டும் கே.அனுஷாந், யு.குகதர்சன், எஸ்.பிரியளன் ஆகியோரை உள்ளடக்கிய அணி ஒன்றும் கே.டிலானி, என்.அருட்செல்வி, கே.குஜினா ஆகியோரை உள்ளடக்கிய அணி மூன்றும், வேலணை மத்திய கல்லூரியைச் சேர்ந்த, எஸ்.சயந்தன், எஸ்.ஜெசிந்தன், எஸ்.நிரோஜன் ஆகியோரை உள்ளடக்கிய டெக் போய்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

முல்லைத்தீவு வலயத்திலிருந்து, கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த, கே.கிஷோபிகன், டி.ஜீவதரதன், எஸ்.அட்சயன் ஆகியோரை உள்ளடக்கிய ஐ.டி கிங்ஸ் அணியும், வித்தியானந்தா கல்லூரியைச் சேர்ந்த பி.கினோஷாந் பிரதிநிதித்துவப்படுத்தும் கினோஸ் அணியும், செம்மலை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த, எம்.கயானி, எம்.கஸ்தூரி, யு.உதயநந்தினி ஆகியோரை உள்ளடக்கிய அணி இரண்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

துணுக்காய் வலயத்திலிருந்து, மல்லாவி மத்திய கல்லூரியைச் சேர்ந்த பி.அஜிர்தன் பிரதிநிதித்துவப்படுத்திய அணியும் பி.போல்கிறிஸ்டி, பி.விஷ்ணுராஜ், டி.லோஜினி ஆகியோரை உள்ளடக்கிய அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

கிளிநொச்சி வலயத்திலிருந்து, வட்டக்கச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த கே.கோபிந்திரன் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி, இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

வவுனியா வடக்கு வலயத்திலிருந்து, புளியங்குளம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த, என்.சிவரஞ்சனி, கே.தனுசந்தன், கே.கீர்த்தனா ஆகியோரை உள்ளடக்கிய தி வேல்ட் அணியும் எஸ்.சொலோம்ராஜ், கே.விதுர்ஷனா, எம்.அம்ஷினி ஆகியோரை உள்ளடக்கிய சூரியன் அணியும் எஸ்.கபில்ராஜ், பி.தர்சன், எம்.மயூரதி ஆகியோரை உள்ளடக்கிய ஸ்டார் ஹப் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

வவுனியா தெற்கு வலயத்திலிருந்து, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து, எஸ்.சுஹீர்மன், கே.கஜானன், என்.சஞ்சீவன் ஆகியோரை உள்ளடக்கிய டெக்னிக்கல் டைகேர்ஸ் அணியும், றம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.பிறேமி, எஸ்.தக்ஷன்யா, எஸ்.அக்ஷயா ஆகியோரை உள்ளடக்கிய பிளக் அன்ட் வைட் அணியும், தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின், என்.திவாகர், ஏ.அபிஷேக், ஆர்.கிறிஷிகன் ஆகியோரினை உள்ளடக்கிய கோட்ஸ் ஐ அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

மன்னார் வலயத்திலிருந்து சென்.சேவியர் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த, எம்.இ.டி பெர்ணான்டோ, எம்.சஞ்சீவன், எஸ்.திலக்ஸன் ஆகியோரை உள்ளடக்கிய ஸ்கேவியர்ட்டிஸ் ஒன்று அணியும் பி.பானுஜன் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்கேவியர்ட்டிஸ் இரண்டு அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட 34 அணிகளுக்கான இறுதிப் போட்டியானது, எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .