Shanmugan Murugavel / 2016 மே 26 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வலர் நிறுவனமான Yarl IT Hubஇன் மே மாதத்துக்கான சமூகக் கலந்துரையாடலானது எதிர்வரும் சனிக்கிழமை (28) இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம், நல்லூர் வீதி இலக்கம் 527இல் உள்ள தியாகி அறக்கொடை மண்டபத்தில் மாலை 2 மணி முதல் 5 மணி வரை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில், தகவல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்த ஆரம்ப கட்ட நிறுவனங்கள் தொடர்பில் புதிய யோசனைகள் வழங்குவதில் Ted Talks மூலம் பிரபலமான Jay Cousinsஉம் பங்குபற்றி ஆற்றுகையை நிகழ்த்தவுள்ளார். இவர் தவிர மேலுமிரு பிரபல ஆற்றுகையாளர்கள் இருவரும் இக்கலந்துரையாடலில் ஆற்றுகையை நிகழ்த்தவுள்ளனர். இந்நிலையில் இக்கலந்துரையாடலில் அனைத்து தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்களும் தொழில் முனைவோரும் பங்குபற்றலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, Yarl IT Hubஇனால் நடாத்தப்படும் Yarl Geek Challenge ஜூனியர் போட்டிகளில் இவ்வருடம் பங்குபற்றும் மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கும் அன்று சனிகிழமை (28) காலை 9 மணிக்கு தியாகி அறக்கொடை மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிலையில், ஆர்வமுள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025