Shanmugan Murugavel / 2016 மே 16 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}




தீவகம், வவுனியா கல்வி வலயங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறையும் கருத்தரங்கும் வடமாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub இனால் கடந்த வாரயிறுதியில் முறையே புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலும் இடம்பெற்றது. இந்தப் பயிற்சிப்பட்டறையில் Open Hardware, Bootstrap, JavaScript என்பவற்றில் நிரலிகள் எழுத அறிமுகமும் பயிற்சியும் வழங்கப்பட்டிருந்தன.



இந்நிலையில் அடுத்த வாரம், முல்லைத்தீவு வலய தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கானதும் மாணவர்களுக்குமான பயிற்சிப்பட்டறையும் கருத்தரங்கும் முள்ளியவளை விபுலானாந்தாக் கல்லூரியிலும் துணுக்காய் வலய ஆசிரியர்களுக்கானதும் மாணவர்களுக்குமான பயிற்சிப்பட்டறையும் கருத்தரங்கும் மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்திலும் எதிர்வரும் சனிக்கிழமை (21) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.



1 hours ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
27 Oct 2025