2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

அசரவைக்கும் ‘கோஸ்க்’

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூக்கை மாத்திரம் மூடக்கூடிய வகையில் ‘கோஸ்க்“(kosk )என்ற  புதிய முகக் கவசத்தை தென்கொரியாவைச் சேர்ந்த அட்மான் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

 இம் முகக் கவசத்தின் மூலம் மூக்கையும் வாயையும் மூட முடியும் எனவும்,  தேவை ஏற்படும் போது அதனை மடித்து  மூக்கை மாத்திரம் மூடியவாறு பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை பொதுவாக ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்ரோரண்ட்களில்  பயன்படுத்திக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டதாகவும்  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 0.3 மைக்ரான் அளவு சிறிய துகள்களையும், கிருமிகளையும் தடுக்கக் கூடிய அளவில் 80 சதவீத செயல்திறன் கொண்டதாக இம்முகக் கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X