Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 03 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்பிள் நிறுவனம் 6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 6 ஆம் தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி, அதாவது 6ஜி தொழில்நுட்பத்தில் பணியாற்ற பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆப்பிள் தனது வலைதளத்தின் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிட்டுள்ளது.
வயர்லெஸ் சிஸ்டம் ஆய்வு பொறியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிலிகான் வேலி மற்றும் சான் டெய்கோ அலுவலகங்களில் பணியாற்றுவர். “எதிர்கால ஆப்பிள் சாதனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு” எனும் தலைப்பில் ஆப்பிள் இப்புதிய பணி பற்றி விவரிக்கிறது.
இந்தப் பிரிவில் பணியாற்றுவோர் 6ஜி வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறைகளுக்கான ரேடியோ நெட்வொர்க்குகளை வடிவமைப்பார்கள் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. 6ஜி தொழில்நுட்பம் இன்றைய திகதியில் தொலைதூர கனவு ஆகும். தற்சமயம் 5ஜி தொழில்நுட்பம் மெல்ல பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது.
எனினும், 4ஜி எல்டிஇ உலகின் பல்வேறு நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் ஆக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம், 6ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோரில் முன்னணியில் இருக்க திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அனைத்து ஐபோன் 12 சீரிஸ் மாடல்களும் 5ஜி வசதி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025