Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 11 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூகிளின் பிரதம நிறைவேற்றதிகாரியான சுந்தர் பிச்சைக்கு, 199 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஐக்கிய அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் பிரதம நிறைவேற்றதிகாரியாக சுந்தர் பிச்சை மாறியுள்ளார்.
தேடல் இயந்திர ஜாம்பவானான கூகிளானது, தனது தாய் நிறுவனமான அல்பபெட்டை உருவாக்கியதைத் தொடர்ந்தே, கூகிளின் பிரதம நிறைவேற்றதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, போர்ப்ஸின் தகவல்களின்படி, கூகிளின் நிறுவுநர்களான லரி பேஜ்ஜும் சேர்ஜி பிரின்னும் முறையே 34.6 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் 33.9 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் வருமானாகப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணைக்குழுவுக்கு கடந்த மூன்றாம் திகதி சமர்பிக்கப்பட்ட தகவல்களின்படியே, நாற்பத்து மூன்று வயதான சுந்தர் பிச்சைக்கு, அல்பபெட் நிறுவனத்தின் 273,328 பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலே வழங்கப்பட்ட சாதனை ரீதியான பங்குகளோடு சேர்த்து, தற்போது, மொத்தமாக, கிட்டத்தட்ட 650 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பங்குகளுக்கு உரித்துடையவராக இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 2019ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு காலாண்டிலும் சுந்தர் பிச்சையின் பங்குகள் அதிகரித்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, பங்குகளை முழுமையாக கையாள்வதற்கான நிலை, பகுதிபகுதியாகவே சுந்தர்பிச்சைக்கு கிடைக்கவுள்ளது.
2004ஆம் ஆண்டு கூகிளில் நுழைந்த சுந்தர் பிச்சை, ஆரம்பத்தில், கூகிள் குரோம் உள்ளிட்ட கூகிளின் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புக்களை கவனித்துக் கொண்டிருந்ததுடன், கூகிள் ட்ரைவ்க்கு பொறுப்பாக இருந்ததுடன் ஜிமெயில், கூகிள் மப்ஸையும் கவனித்துக்கொண்டிருந்தார்.
இதேவேளை, கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த இறுதி மூன்று மாதங்களில் 4.9 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பதிவு செய்ததன் மூலம், உலகின் மிகப்பெறுமதியான நிறுவனம் என்று பெயர் பெற்ற அப்பிளை பின்தள்ளியுள்ளது.
10 minute ago
24 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
40 minute ago
51 minute ago