Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜனவரி 13 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது Internet Explorerஇன் முன்னைய பதிப்புக்களுக்கான தொழில்நுட்ப உதவியை நிறுத்துவதாக மைக்ரோசொப்ட் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதே நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த மாற்றங்களால் 8ஆவது 9ஆவது 10ஆவது பதிப்பு Internet Explorer உலாவிகளே பாதிப்படைகின்றன.
மேற்படி, பழைய இணைய உலாவிகளால் 20 சதவீதத்துக்கு அதிகமான இணையவழி போக்குவரத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகையில், Internet Explorer பயனர்களில் 55 சதவீதமானோரே, அதன் புதிய பதிப்பை பயன்படுத்துவதாக கொம்பியூட்டர்வேர்ல்ட் தெரிவித்துள்ளது.
ஜனவரி 12, 2016இலிருந்து, இயங்குதளத்துடன் இணைந்து இயங்கும், தற்போதிருக்கின்ற Internet Explorerஇன் இறுதியான பதிப்பு மட்டுமே தொழில்நுட்ப உதவியையும் பாதுகாப்பு இற்றைப்படுத்தல்களையும் பெறும் என, மென்பொருள் ஜாம்பவானான மைக்ரோசொப்ட், தனது இணையத்தளத்தில் அறிவித்துள்ளது. இதன்படி, வின்டோஸ் 10 பதிப்பு இயங்குதளத்தின் இயல்பிருப்பு இணைய உலாவியான Internet Explorer 11 மற்றும் Edgeக்கான உதவியை தொடர்ந்தும் மைக்ரோசொப்ட் வழங்கவுள்ளது.
வேகமான மற்றும் மேலதிக பாதுகாப்பான அனுபவத்துக்கு, தற்போதிருக்கும் புதிய Internet Explorerக்கு இற்றைப்படுத்தலாக்குமாறு தனது வாடிக்கையாளர்களை மைக்ரோசொப்ட் ஊக்குவிக்கின்றது.
இணைய உலாவிச் சந்தையில் 57 சதவீதமானவற்றை Internet Explorer கொண்டிருப்பதாகவும் 25 சதவீதத்தை Google Chrome கொண்டிருப்பதாகவும் 12 சதவீதத்தை Mozilla Firefox கொண்டிருப்பதாகவும் ஐந்து சதவீத்தை அப்பிளின் சபாரி கொண்டிருப்பதாகவும் NetMarketShare தெரிவிக்கிறது. தவிர, கொம்பியூட்டர்வேர்ல்ட்டின் கருத்துப் படி, 340 மில்லியன் பேர் பழைய Internet Explorer பதிப்புக்களையே இன்னும் பயன்படுத்துகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
29 minute ago
29 minute ago