Ilango Bharathy / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபுதாபியில் 26 நாடுகள் கலந்துகொள்ளும் ஆளில்லா விமான கண்காட்சி இன்றைய தினம்(21) நடைபெறவுள்ளது.
அபுதாபியில் இருக்கும் தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் ஆளில்லாத விமானத்தை இயக்குவது குறித்த பயிற்சி, மற்றும் அதன் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு சவால்கள், நவீனமயமான திட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 26 நாடுகளிலிருந்து சுமார் 134க்கும் அதிகமான வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கண்காட்சியில், ஒஸ்திரியா, துருக்கி, பக்ரைன், இஸ்ரேல், பல்கேரியா, மால்டா மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் முதல் தடவையாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago