2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இனிமேல் தாவரங்களின் இசையைக் கேட்கலாம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாவரங்களில் இருந்து இசையைக் கேட்கும் வகையில் புதிய கருவியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிளாண்ட்வேவ் எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த கருவியை நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் தொலைபேசியுடன் இணைப்பதன் மூலம் தாவரங்களின் இசையைக் கேட்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலைகளில் இக்கருவியின் இரண்டு மின்முனைகளை வைப்பதன் மூலம் தாவரங்களில் உள்ள மின் மாறுபாடுகளைக் கண்டறிய முடியும் என்று பிளான்ட்வேவ் (Plantwave) இணையத்தளம் கூறுகிறது. செடிகளில் தோன்றும் மாறுபாடுகள் அலைகளாகப் பிடிக்கப்பட்டு, அவை இசையாக மாற்றப்படுகின்றன.

 எனினும் ஆரோக்கியமான இலைகள் மட்டுமே இசையை உருவாக்கும் எனவும், இக் கருவியானது  MIDI சிந்த்ஸ் மற்றும் டிஜிட்டல் ஓடியோ முறையில் செயற்படும் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .