2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

இன்ஸ்டாகிராமில் புதிய வசதி அறிமுகம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளவில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூக வலைத்தளமாக, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பொது வெளியில் பகிர உதவும் இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமானது தனது பயனாளர்களின் பாதுகாப்பைக்  கருத்தில் கொண்டு லிமிட்ஸ் என்கிற  புதிய அம்சமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ் புதிய அம்சத்தின் மூலம்,பயனாளர்களால் உரையாடல்களைக் கட்டுப்படுத்த முடியும்.  

குறிப்பாக தாங்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகப் பயனர்கள் நினைக்கும்போது தங்கள் கணக்கைக் கட்டுப்படுத்தி வைக்கலாம். இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பதிவுகளில் இனரீதியான வெறுப்பைக் காட்டும் கருத்துகளுக்கு இடமில்லை என்று அதன் தலைவர் ஆடம் மொஸேரி (Adam Mosseri) கூறியுள்ளார்.

வெறுப்பைப் பரப்பும் கருத்துகளை முற்றிலுமாக நீக்கவே இன்ஸ்டாகிராம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வசதி இப்போதைக்குக் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X