2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

உணவு அச்சிடும் 3D இயந்திரம்!

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் (3D Printers) பிரபலமாகத்தொடங்கின. இன்னும் அது முழுமையான பொதுப்பாவணைக்கு வரமுன்னரே, இப்போது அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக, புதிய ஒரு தொழில்நுட்பம் முன்னோட்ட முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முப்பரிமாண உணவு அச்சீட்டு இயந்திரமாக அறிமுகமாகியிருக்கும் இந்த இயந்திரம், உணவுகளை தயாரிப்பதற்கு உதவவுள்ளது. அதாவது, பிரபல ஆங்கில திரைப்படங்கள் சிலவற்றில் எதிர்வு கூறப்பட்ட, எதிர்கால உணவு தயாரிப்பு முறைகளுக்கு, ஒரு முதல்படி இயந்திரமாக இது உருவாகியுள்ளது.

சாதாரண உணவுகள் அனைத்தையும் இதில் தயாரிக்க முடியாவிட்டாலும், ஆரம்ப கட்டத்தில் சில வகை பழங்களின் சுவையை உடைய உணவுகளை இந்த இயந்திரம் அச்சிடவல்லது!

அதாவது, chocolate, vanilla, mint (புதினா) போன்ற வகை சுவைகளையுடைய பதார்த்தங்களை இது அச்சிடக்கூடியது.
இதன் தயாரிப்பாளர்கள், எதிர் காலத்தில் இவ்வகை இயந்திரங்களால் ஒரு hamburger(ஹம்பேர்கர்) ஐ கூட உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த இயந்திரத்திற்கு “FOODINI” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X